search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர் கவிழ்ந்து"

    • செங்குத்தான மலை பாதையில் ஏறிய போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த அனந்தலை மலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது. இந்த கல்குவாரியில் பாறைகளை துளையிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தனியார் கல்குவாரி ஒன்றில் வடகடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 27) என்பவர் கல்குவாரிக்கு பாறைகளை துளையிடும் கம்ப்ரஸர் டிராக்டரை ஓட்டி சென்றார்.

    டிராக்டர் செங்குத்தான மலை பாதையில் செல்லும்போது திடீரென டிராக்டர் பழுதடைந்துது. இதனால் டிரைவர் கட்டுபாட்டை இழந்து பின்னோக்கியே வந்து தடம்புரண்டு டிராக்டர் கவிழ்ந்தது.

    இதில் டிராக்டரின் கீழ் சிக்கிகொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக குமாரின் மனைவி ரஞ்சிதா வாலாஜா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குமார் உடலை பிரேத பரிசோதனை க்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவிக்குமார் என்பவர் டிராக்டரை ஓட்டிக் கொண்டுவரும்போது, சர்வீஸ் சாலையில் டிராக்டரை திரும்ப முயன்றார்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடு ரோட்டில் கவிழ்ந்தது.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் லிங்காரெட்டிபாளையத்திலிருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் படாளத்திற்கு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. டிராக்டரை புதுவை மாநிலம் கூனிச்சம்பட்டை சேர்ந்த ரவிக்குமார் ஓட்டி சென்றார். அப்போது திண்டிவனம் புறவழிச்சாலை ஆர்யாஸ் உணவகம் அருகே வரும்போது டிரைவர் ரவிக்குமார் சர்வீஸ் சாலையில் டிராக்டரை திரும்ப முயன்றார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடு ரோட்டில் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த கரும்புகள் ரோடு முழுவதும் சிதறியது. இந்த விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவலறிந்து விரைந்த வந்த திண்டிவனம் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ரோந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.

    ×